close
Choose your channels

சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டம்.. மகிழ்ச்சியுடன் கலந்து கொண்ட தனுஷ்..!

Saturday, August 19, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த திரைப்படத்தின் ஓராண்டு வெற்றி விழா கொண்டாட்டம் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடந்த நிலையில் அதில் மகிழ்ச்சியுடன் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தனுஷ் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’திருச்சிற்றம்பலம்’. இந்த படம் வெளியாகி நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு செய்ததை அடுத்து படக்குழுவினர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜவஹர் கே மித்ரன் இயக்கத்தில், தனுஷ், நித்யா மேனன், ப்ரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பு இன்றி வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்த திரைப்படம் என்பதும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment