ரூ.100 கோடி வசூலை நெருங்குகிறதா தனுஷின் 'திருச்சிற்றம்பலம்'? இதோ முழு விபரங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது வாரமாக நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு முதல் நாளே கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக சென்று படம் பார்த்து வருகின்றனர் என்றும் நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க வரும் கூட்டம் அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல் வாரத்தில் 50 கோடியை தாண்டி வசூல் செய்த ‘திருச்சிற்றம்பலம்’ இரண்டாவது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் செய்து தற்போது சுமார் 65 கோடி வசூல் செய்து விட்டதாகவும் மிக விரைவில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தின் முதல் வார மற்றும் இரண்டாவது வாரத்தில் மூன்று நாள் வசூல் குறித்து தற்போது பார்ப்போம்.
முதல் வார வசூல்: ரூ.51.42 கோடி
இரண்டாவது வாரம்:
முதல் நாள்: ரூ.3.47 கோடி
இரண்டாவது நாள்: ரூ. 4.61 கோடி
மூன்றாவது நாள்: ரூ.5.22 கோடி
மொத்த வசூல்: ரூ.64.72 கோடி
#Thiruchitrambalam BO Collections report TN.
— FridayBuzz Tamil (@fridaybuzzoffl) August 28, 2022
Week 1 - ₹ 51.42 cr
Week 2
Day 1 - ₹ 3.47 cr
Day 2 - ₹ 4.61 cr
Day 3 - ₹ 5.22 cr
Total - ₹ 64.72 cr
Worldwide it’s almost nearing 100Cr! A Big Treat for Theatre owners. #Dhanush pic.twitter.com/VmbhhvGY8Q
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com