close
Choose your channels

தனுஷின் 'DD3' படத்தில் 19 வயது நடிகை தான் நாயகியா? விரைவில் அறிவிப்பு..!

Saturday, December 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது திரைப்படமான ‘D50’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பதை பார்த்தோம்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமான இந்த படத்தில் அவரது நெருங்கிய உறவினரான வருண் நாயகனாக நடிகை இருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ உட்பட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ’பிடி சார்’ ’வாசுவின் கர்ப்பிணிகள்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் தனுஷின் ‘D50’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படத்திலும் அனிகா தான் நாயகி என்று கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அப்போது நாயகன் நாயகி குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment