தனுஷின் 'DD3' படத்தில் 19 வயது நடிகை தான் நாயகியா? விரைவில் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,December 16 2023]

தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50வது திரைப்படமான ‘D50’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பதை பார்த்தோம்.

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமான இந்த படத்தில் அவரது நெருங்கிய உறவினரான வருண் நாயகனாக நடிகை இருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ‘விஸ்வாசம்’ உட்பட ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் ’பிடி சார்’ ’வாசுவின் கர்ப்பிணிகள்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் தனுஷின் ‘D50’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படத்திலும் அனிகா தான் நாயகி என்று கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் அப்போது நாயகன் நாயகி குறித்த தகவல் உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

அந்த மாயாஜாலம் நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது.. நடிகர் விஷாலின் நெகிழ்ச்சி பதிவு..!

நடிகர் விஷால் நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ரிலீஸ் ஆகி 18 ஆண்டுகள் ஆகியதை அடுத்து இந்த மாயாஜால வெற்றி கிடைத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில்

என் காதுலயே பூ வைக்குறீங்களா? பூர்ணிமாவை வறுத்தெடுத்த கமல்ஹாசன்..!

உலகநாயகன் கமல்ஹாசன் சற்றுமுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமாவை வறுத்தெடுத்த காட்சியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வாரம் சனி, ஞாயிறு என இரண்டு எவிக்சனா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒரு எலிமினேஷன் இருக்கும் என்ற நிலையில் இந்த வாரம் மட்டும் திடீரென மிட்வீக் எலிமினேஷன் என அனன்யா வெளியேற்றப்பட்டார்.

மீண்டு வந்த மனிதனை இப்படியா பார்க்க வேண்டும்? விஜயகாந்த் குறித்து பிரபல தயாரிப்பாளர் வேதனை..!

கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவரால் நிமிர்ந்து உட்கார முடியாத அளவிற்கு அவர் இருந்ததை

ரஜினியை சந்தித்த சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம்.. படம் தயாரிக்க திட்டம் என தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம் ஒருவர் சந்தித்ததாகவும் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.