தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: கைதட்டி கொண்டாடிய படக்குழுவினர்!

  • IndiaGlitz, [Saturday,July 31 2021]

தனுஷ் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அந்த படத்தின் குழுவினர் கைதட்டி சந்தோஷத்தை கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்றது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் அமெரிக்காவுக்கு சென்றார் என்பதும் தெரிந்ததே

சமீபத்தில் இந்த படத்தின் தனது பகுதியின் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தனுஷ் தற்போது ஐதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கிவரும் ’மாறன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து படக்குழுவினர் அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் பணத்திற்காக கொலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடித்து இருப்பதாகவும் சி.ஐ.ஏ அதிகாரி வேடத்தில் ரியான் கோஸ்லிங் நடித்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் மார்க் க்ரேனி என்பவர் எழுதிய நாவலை மையமாகக் கொண்டது என்பதும் அவெஞ்சர்ஸ் இயக்குனர்கள் அந்தோனி ரூசோ, ஜோ ரூசோ ஆகியோர் இந்த படத்தை இயக்கி உள்ளார்கள் என்பதும் தெரிந்ததே.

More News

ஷங்கர் - ராம்சரண் படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை

69 குழந்தைகளைப் பெற்ற பெண்மணி? இந்த உண்மையை நம்ப முடிகிறதா?

“நாம் இருவர், நமக்கு இருவர்“ என்பதே இன்றையக் காலக்கட்டத்தில் பெரும் சிரமமாக இருக்கிறது.

ஒட்டுமொத்த நாடும் எதிர்த்த ஒலிம்பிக் காதல்… தேசங்களை கடந்து வென்ற சுவாரசியம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை ஒட்டி,

தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.7,000 ஊக்கத்தொகை? செம ஆஃபரை அறிவித்த நாடு!

கொரோனா நோய்த்தொற்று அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி அமெரிக்காவில் மக்கள் கடந்த சில மாதங்களாக முகக்கவசம் இல்லாமல் சாலையில் நடமாடும் காட்சியை பார்க்க  முடிந்தது

கீழடி வெள்ளி நாணயம் இவ்வளவு பழமையானதா? வியப்பூட்டும் ஆராய்ச்சி தகவல்!

சமீபத்தில் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சின்னங்களுடன் கூடிய வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்ததைப் பற்றி தமிழ் ஆய்வாளர்கள்,