தனுஷின் பள்ளித்தோழி இவர்தான்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷின் பள்ளிக்கால தோழி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர்கள் இன்று முதல் அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் அறிவிப்பு செய்திருந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரான ராஷி கண்ணா கேரக்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராஷி கண்ணா இந்த படத்தில் அனுஷா என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகவும், இவர் தனுஷின் பள்ளிக்கால தோழி கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ராஷி கண்ணா தவிர ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோரும் நாயகிகளாக நடித்து வரும் நிலையில் அவர்களுடைய கேரக்டர் குறித்த அப்டேட் இன்னும் சில நிமிடங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
Thiruchitrambalam .. meet Anusha … His high school friend pic.twitter.com/SCrvIGrLYL
— Dhanush (@dhanushkraja) June 8, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com