close
Choose your channels

தனுஷின் 'ராயன்' 3 நாட்களில் இத்தனை கோடி வசூலா? நன்றி தெரிவித்த தனுஷ்..!

Monday, July 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மிகப்பெரிய வசூல் கொடுத்துள்ள நிலையில் தனுஷ் ஆனது சமூக வலைதளம் மூலம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் அவரது 50வது படம் மட்டும் இன்றி அவர் முக்கிய வேடத்தில் நடித்து இயக்கியுள்ள படம் என்பதும் இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களுடன் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் இரண்டு நாட்களில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்று நாட்களில் இந்த படத்தின் மொத்த வசூல் 75.42 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இந்த படம் 100 கோடி ரூபாய் என்ற மைல் கல்லை தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’ஏ’ சான்றிதழுடன் வெளியான இந்த படம் மூன்றே நாட்களில் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார், அனைத்து ஆடியன்ஸ்கள், நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவருக்கும் ‘ராயன்’ படத்தை பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாகியதற்கு நன்றி என்றும் இது எனது மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment