தனுஷின் 'ராயன்' டிரைலர் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடித்த இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது என்பது குறித்து அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.
தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி, முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட தொழில்நுட்ப பணியும் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் லிரிக் வீடியோ பாடல்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பதும் ரசிகர்கள் இந்த படத்தின் பாடலுக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் ‘ராயன்’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Here we go, the much-awaited #RaayanTrailer from July 16th! 🔥#Raayan in cinemas from July 26 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan @omdop @editor_prasanna… pic.twitter.com/oTQkfF7RQJ
— Sun Pictures (@sunpictures) July 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments