தனுஷின் 'ராயன்' டிரைலர் எப்போது? சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

  • IndiaGlitz, [Sunday,July 14 2024]

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடித்த இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் வரும் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது என்பது குறித்து அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது.

தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி, முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட தொழில்நுட்ப பணியும் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் லிரிக் வீடியோ பாடல்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது என்பதும் ரசிகர்கள் இந்த படத்தின் பாடலுக்கு பாராட்டுகளை குவித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ‘ராயன்’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

More News

ஆனந்த அம்பானி திருமணத்திற்கு தனித்தனியாக வந்தார்களா அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்? தீயாய் பரவும் வதந்தி..!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் ஆடம்பரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள்

18 ஆண்டுகளுக்கு பின் சினேகன் செய்த அதிர்ச்சி செயல்.. வீட்டை விட்டு வெளியே துரத்திய கன்னிகா..

18 ஆண்டுகளுக்கு பின்னர் சினேகன் செய்த அதிர்ச்சி செயலால் அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை அவரது மனைவி கன்னிகா பூட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சினிமாவை விட்டு விலக முடிவெடுத்தேன்.. 'டீன்ஸ்' ரிலீசுக்கு பின் பார்த்திபன் அதிர்ச்சி தகவல்..!

பார்த்திபன் நடித்து இயக்கிய 'டீன்ஸ்' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருவதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

'இந்தியன் 2' படம் எனக்கு இதனால தான் கனெக்ட் ஆகலை.. 'சிறகடிக்க ஆசை' முத்து விமர்சனம்..!

கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை உலக பிரபலங்கள்

குக் வித் கோமாளி அஸ்வினுக்கு பிக்பாஸ் ஜூலி ஜோடியா? வேறு யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதை அடுத்து இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி