'ராயன்' செகண்ட் சிங்கிள் பாடலை பாடியது பிரபல இசையமைப்பாளரா? சன் பிக்சர்ஸ் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து இயக்கிய ’ராயன்’ என்ற திரைப்படம் வரும் ஜூன் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ஏற்கனவே இந்த படத்தின் சிங்கிள் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த கானா பாடல் தான் நாளை வெளியாக இருப்பதாகவும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.
சந்தீப் கிஷான் மற்றும் அபர்ணா பாலமுரளிக்காக உருவாக்கப்பட்ட இந்த பாடல் குறித்த கூடுதல் விவரங்களை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளதாகவும் அவருடன் ஸ்வேதா மோகன் பாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலின் முதல் வரி ’வாட்டர் பாக்கெட்’ என்று அறிவித்துள்ளதை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஏற்கனவே பல திரைப்படங்களில் பாடல் பாடியுள்ளார் என்பதும் குறிப்பாக தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’தேன்மொழி’ என்ற பாடலை பாடியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தனுஷ் படத்தில் சந்தோஷ் நாராயணன் பாடி உள்ளதை அடுத்து இந்த பாடலும் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#WaterPacket Gaana-ku vibe pannalama? 😍🔥 #RaayanSecondSingle tomorrow at 6PM! #Raayan in cinemas from 13 June, 2024!@dhanushkraja @arrahman @Music_Santhosh @ShwetaMohan #GanaKadhar @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara… pic.twitter.com/WxsTxJ8lv9
— Sun Pictures (@sunpictures) May 23, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments