தனுஷின் 'ராயன்' படத்தின் சூப்பர் அப்டேட்.. ஏஆர் ரஹ்மானிடம் இருந்து இப்படி ஒரு பாடலா?

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூன் 13ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் அவ்வபோது நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இம்மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்து குறித்த அறிவிப்பை தனுஷ் வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த ஒரு கானா பாடல் வெளியாக இருப்பதாகவும் இந்த பாடல் மே 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் அறிவிப்புடன் அவர் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரில் சந்திப் கிஷான் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய இருவரும் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இருவரும் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரகுமானிடம் இருந்து ஒரு கானா பாடல் என்பது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த பாடலுக்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தொட்டுப்பார் கை நடுங்கும்.. மூச்சடங்கும் இவனை கண்டு.. 'இந்தியன் 2' சிங்கிள் பாடல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'இந்தியன் 2' படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி

இலங்கையில் ஒரு இன்பச்சுற்றுலா.. டூபீஸ் பிகினியில் 'பேச்சிலர்' நடிகை..!

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' என்ற திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள

இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கமல்-ரஜினி பட நடிகை.. 100 ஆண்டுகால நட்பு குறித்து பெருமிதம்..!

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் படங்களில் நாயகியாக நடித்த நடிகை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அவர்களை சந்தித்ததோடு இங்கிலாந்துக்கும் தனது நாட்டிற்கும் இ

திரையில் பார்த்ததை விட சிறந்தவர்.. தமிழ் மாஸ் நடிகரை சந்தித்த ராம் கோபால் வர்மாவின் ட்விட்..!

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா நேற்று சென்னை வந்திருந்த நிலையில் அவர் மாஸ் தமிழ் நடிகரை அவரது அலுவலகத்தில் சந்தித்த புகைப்படத்தை

மே 24ஆம் தேதி வெளியாக இருந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் தடை.. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

நாளை மறுநாள் அதாவது மே 24ஆம் தேதி வெளியாக இருக்கும் படத்தின் டைட்டிலுக்கு திடீரென சென்சார் அனுமதி மறுத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.