close
Choose your channels

தனுஷின் 'ராயன்' ரன்னிங் டைம் இவ்வளவு தானா? இசை வெளியிட்டு விழாவின் ஹைலைட்ஸ்..

Sunday, July 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ‘ராயன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த இசை வெளியிட்டு விழாவில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியானது. அதன்படி இந்த படத்தின் ரன்னிங் டைம் 140 நிமிடங்கள் மட்டுமே என்றும் அதாவது 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே என்றும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் சென்சார் முடிந்தவுடன் அதிகாரபூர்வமாக ரன்னிங் டைம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த தனுஷின் 50வது படமான ‘ராயன்’ படத்தின் ஹைலைட்ஸ்களை பார்ப்போம். தனுஷின் அசுர வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவதாகவும் இது ஒரு அழகான வளர்ச்சி என்றும், ஒரு இயக்குனராக இன்று தனுஷ் வளர்ந்து இருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசினார்.

தனுஷை யாருக்கு பிடிக்காமல் இருக்கும்? நான் அவரை ஒரு குருவாகத்தான் பார்க்கிறேன், ’புதுப்பேட்டை 2’ படத்திற்காக காத்திருக்கிறேன் என்று காளிதாஸ் ஜெயராம் பேசினார்.

நடிகர் சந்திப் கிஷான் பேசியபோது தனுஷுடன் நான் இரண்டாவது முறையாக இணைகிறேன். அவர் எனக்கு ஒரு குரு மட்டுமல்ல, எனது அண்ணன், நான் கதையை கேட்காமல் நடிக்க முதல் படம் ‘ராயன்’ தான். தனுஷ் எல்லோருக்கும் பிடித்த ஒரு நல்ல மனிதர்’ என்று தெரிவித்தார்.

தனுஷின் சகோதரர் செல்வராகவன் பேசும்போது ’தனுஷை நான் செதுக்கவில்லை, நான் கல் மட்டும் தான் வைத்து விட்டு போய்விட்டேன், அவரே தன்னை செதுக்கி கொண்டார், யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத நல்ல மனம் கொண்டவர் தனுஷ், அந்த மனதுக்கு அவருக்கு எந்த குறையும் வராது’ என்று பேசினார்.

நடிகை துஷாரா விஜயன் பேசிய போது ’எனக்கு இந்த படத்தில் கிடைத்த அனுபவங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது, இந்த படம் ரசிகர்கள் கண்டிப்பாக பிடிக்கும்’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment