close
Choose your channels

தனுஷின் 'ராயன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? டீசர் எப்போது ரிலீஸ்?

Thursday, April 4, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷின் 50வது திரைப்படமான ‘ராயன்’ படத்தை அவரே இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்றாலும் இந்தியா முழுவதும் தேர்தல் முடிவடைந்து, தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல் படி இந்த படம் ஜூன் 7ஆம் தேதி இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் அதன் பிறகு இந்த படம் வெளியாகும் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் டீசர் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரை உலகில் கடந்த சில வாரங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாத நிலையில் ’ராயன்’ தான் தேர்தலுக்குப் பின் வெளியாகும் முதல் பெரிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment