தனுஷின் 'ராயன்' படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? 'மகாராஜா'வை முந்துமா?

  • IndiaGlitz, [Saturday,July 27 2024]

தனுஷ் நடித்த இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷின் 50வது திரைப்படத்தை அவரே இயக்கிய நிலையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்தது என்பதும் நேற்று இந்த படம் உலகம் முழுவதும் 2000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பதும் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களும் கலந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 90 கோடி என்ற நிலையில் முதல் நாள் இந்த படம் 12.5 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்துள்ளதால் இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

’இந்தியன் 2’ உள்பட போட்டிக்கு எந்த படமும் இல்லை என்பதால் ‘ராயன்’ திரைப்படம் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்றும் கூறப்பட்டாலும் ’மகாராஜா’ படத்தின் வசூலை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.