தனுஷின் 'ராயன்' இசை வெளியீட்டு விழா எப்போது? சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து அது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இதற்கு முன் நடந்த தனுஷ் படங்களின் இசை வெளியீட்டு விழாவின் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த இசை வெளியீட்டு விழா விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் 50வது படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘ராயன்’ படத்தை அவரே இயக்கியுள்ளார். மேலும் அவருடன் எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
The countdown begins! 😍
— Sun Pictures (@sunpictures) July 4, 2024
Get ready for the stellar #RaayanAudioLaunch on July 6th. #RaayanAudioLaunch coming soon on Sun TV@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @kalidas700 @sundeepkishan @prakashraaj @officialdushara @Aparnabala2 @varusarath5 #Saravanan… pic.twitter.com/qN0n2js79p
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com