தனுஷின் 'ராயன்' இசை வெளியீட்டு விழா எப்போது? சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,July 04 2024]

தனுஷ் நடித்து இயக்கிய ‘ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்து அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து அது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இதற்கு முன் நடந்த தனுஷ் படங்களின் இசை வெளியீட்டு விழாவின் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த இசை வெளியீட்டு விழா விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 50வது படம் என்ற பெருமையை பெற்றுள்ள ‘ராயன்’ படத்தை அவரே இயக்கியுள்ளார். மேலும் அவருடன் எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

More News

டூ பீஸ் உடையில் சன் பாத் எடுத்த பிக்பாஸ் மாயா.. மதுரை சிங்கப் பெண்ணுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

பிக் பாஸ் போட்டியாளர் நடிகை மாயா அட்லாண்டிக் கடலில் சன் பாத் எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த ஹாட் வீடியோவுக்கு ரசிகர்கள்

'கல்கி 2898 ஏடி' படத்தின் 2 கேரக்டர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்த தமிழ் நடிகர்.. யார் தெரியுமா?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் இரண்டு கேரக்டர்களுக்கு தமிழ் நடிகர் ஒருவர் டப்பிங் குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நடிகை வீட்டில் திருட்டு.. வேலை செய்த பெண் உள்பட 2 பேர் கைது..!

பிரபல தமிழ் நடிகை வீட்டில் திருடு நடந்ததை எடுத்து அந்த வீட்டில் பணி செய்த பெண் உள்பட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ரெமோ' படத்தின் ரீமேக்கா? பிரபல நடிகரின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்து ரசிகர்கள் குழப்பம்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படத்தில் அவர் ஆண், பெண் என இரண்டு கெட்டப்புகளில் நடித்த நிலையில் தற்போது பிரபல  நடிகர் நடித்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதேபோன்று காட்சி இருப்பதை

'மஞ்சும்மெல் பாய்ஸ்' போலவே இன்னொரு மலையாள படத்திற்கும் பிரச்சனை.. 'அழகிய லைலாவில்' என்ன நடந்தது?

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் 'மஞ்சும்மெல் பாய்ஸ்' மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் 'குணா' படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலை'