'ராயன்' சோலோ ரிலீஸ் இல்லையா? அதே தேதியில் வெளியாகும் பிரபலத்தின் திரைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,May 07 2024]

தனுஷ் நடித்த ’ராயன்’ என்ற திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று நேற்று சன் பிக்சர்ஸ் அறிவித்த நிலையில் அந்த படம் அநேகமாக ஜூன் 13ஆம் தேதி வெளியாகலாம் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஏற்கனவே ஜூன் 13ஆம் தேதி கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அந்த படம் ஜூலைக்கு தள்ளி வைத்து விட்டதால் ’ராயன்’ திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆகும் என்றும் அதனால் ஓப்பனிங் வசூல் அபாரமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’ராயன்’ ரிலீஸ் என கூறப்படும் அதே ஜூன் 13ஆம் தேதி விக்ரம் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் ஜூன் 13ஆம் தேதி ’தங்கலான்’ படத்தை வெளியிட அந்த படத்தின் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஜூன் 13ஆம் தேதி 'ராயன்’ மற்றும் ’தங்கலான்’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இரண்டு படங்களும் வெளியானாலும் இரண்டு படங்களுக்குமே நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தேர்தலுக்காக பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு மாஸ் நடிகர்களின் படங்கள் ரிலீசாகி கொண்டு இருப்பதால் இனி வரும் நாட்களில் குறிப்பாக கோடை விடுமுறையில் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

2024ஆம் ஆண்டின் முதல் வெற்றிப்படமா? 'அரண்மனை 4' படத்தின் 3 நாள் வசூல்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் மூன்றே நாட்களில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளதாகவும் 2024ஆம் ஆண்டின்

தனுஷின் 'ராயன்' படத்தின் மாஸ் அறிவிப்பு.. தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சன் பிக்சர்ஸ்..!

தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தனுஷின் 50வது படம் என்பதால் இந்த

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம்.. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்..!

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் தகவல்கள் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'உத்தம வில்லன்' நஷ்டம் விவகாரம்.. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' திரைப்படம் நஷ்டத்தை அளித்த நிலையில் அதற்கு பதிலாக ஒரு படம் நடித்து தருவேன் என்று கமல்ஹாசன் உறுதிமொழி அளித்ததாகவும்

லைகா நிறுவனத்தின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. முக்கிய வேடத்தில் பிரபல நடிகை..!

லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.