'பாகுபலி 2' சுனாமியிலும் தப்பிய தனுஷ்-தன்ஷிகா படங்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம் 28ஆம் தேதி இந்தியாவின் 90% திரையரங்குகளில் 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படத்தின் சுனாமி வசூல் காரணமாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதையும், ஒருசில படங்களின் வசூல் அடிபட்டதும் அனைவரும் அறிந்ததே.
ஆனால் பாகுபலி சுனாமியிலும் தனுஷின் 'பவர் பாண்டி' மற்றும் கடந்த வெள்ளியன்று வெளியான தன்ஷிகாவின் 'எங்க அம்மா ராணி' படங்களின் வசூலும் திருப்திகரமாக இருந்ததாக விநியோகிஸ்தர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
தனுஷின் பவர்பாண்டி' திரைப்படம் கடந்த வாரம் சென்னையில் 8 திரையரங்குகளில் 29 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.3,86,240 வசூல் செய்தது. இந்த படத்தின் மொத்த சென்னை வசூல் ரூ.1,87,83,970 ஆகும்.
அதேபோல் கடந்த வெள்ளியன்று வெளியான தன்ஷிகாவின் 'எங்க அம்மா ராணி' திரைப்படம் சென்னையில் 3 திரையரங்குகளில் 12 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.2,14,910 என சராசரி வசூலை பெற்றுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout