தீபாவளி அன்று விஜய்யுடன் மோதும் 'இளைய சூப்பர் ஸ்டார்'

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு வரும் தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ்-துரைசெந்தில்குமார் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'பட்டாசு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டு டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளியன்று விஜயின் 'பிகில்' திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்யுடன் தனுஷின் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த இடத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்து வருகின்றனர்.
 

More News

மீராவின் நம்பிக்கை வீண்போகாது! குறும்படம் போடும் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று மீராவை கமல் வறுத்தெடுத்தார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் அதனை மெய்ப்பிப்பது

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் பக்கா ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கி வரும் 'ஹீரோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் டிசைன்

'ஜோதிகா'தான் எனது ஜாக்பாட்: சூர்யா

ஜோதிகா, ரேவதி நடித்த 'ஜாக்பாட்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

போஸ்டர் வச்சதுக்கே பட்டாசு வெடித்து கொண்டாடிய 'தல' ரசிகர்கள்

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும்

சிவகார்த்திகேயன் படத்தின் சிறப்பான தரமான அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.