தீபாவளி அன்று விஜய்யுடன் மோதும் 'இளைய சூப்பர் ஸ்டார்'

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு வரும் தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ்-துரைசெந்தில்குமார் படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'பட்டாசு' என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டு டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளியன்று விஜயின் 'பிகில்' திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விஜய்யுடன் தனுஷின் படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த இடத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்து வருகின்றனர்.