தனுஷின் 'பட்டாஸ்' குறித்த அதிரடி அப்டேட்!

  • IndiaGlitz, [Saturday,November 30 2019]

தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து அவர் நடித்த அடுத்த திரைப்படமான ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற திரைப்படம் நேற்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ’பட்டாஸ்’ மற்றும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’சுருளி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ படம் குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷ்யாகியுள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு ’பட்டாஸ்’ அப்டேட் வெளிவந்ததும் சமூக வலைதளங்கள் தெறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது