தனுஷின் 'பட்டாஸ்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ தகவல்

  • IndiaGlitz, [Friday,December 13 2019]

தனுஷ் நடித்த ’அசுரன் மற்றும் ’என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் இந்த இரண்டு படங்களில் ’அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலிலும் சாதனை புரிந்தது.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படமான ’பட்டாஸ்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய மோஷன் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை எதிர்நோக்கி தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஒரு வாரத்தில் விசாரணை, 21வது நாளில் தூக்கு: ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறை செய்யும் குற்றவாளிகள் குறித்த வழக்குகளை நீடிப்பதும் அதன் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டாலும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் பிரபல நடிகர்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமன்றி அனைத்து மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' சென்சார் தகவல்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'ஹீரோ' திரைப்படம் வரும் 20ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

கழுகை பிடித்து நீருக்குள் இழுத்த ஆக்டோபஸ்..! வீடியோ.

கனடா வான்கோவர் தீவில் மீன் பிடித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த மீனவர்கள் ஒரு வித்தியாசமான சம்பவத்தைப் படம் பிடித்துள்ளனர்

இனி இந்த போன்களிலெல்லாம் வாட்ஸ் அப் வேலை செய்யாது..!

புது அப்டேட்டுகளுடன் பழைய இயங்குதளங்களை இணைத்து சேவைகளை வழங்க முடிவதில்லை என்பதால் சில போன்களில் இனி தங்களது சேவையை பெற முடியாது என் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது