சிரஞ்சீவி மகள் படத்தில் தனுஷ்?

  • IndiaGlitz, [Friday,June 24 2016]

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் படம் நேற்று முதல் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிரஞ்சீவியின் தம்பி மகள் நிகாரிகா அறிமுகமாகும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ஓக மனசு' என்ற திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது.
நாக செளரியா, நிகாரிகா நடிப்பில் ராமராஜூ இயக்கியுள்ள இந்த ரொமான்ஸ் படத்தின் ரிசல்ட்டை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று சென்னையில் நடந்த இந்த படத்தின் ஸ்பெஷல் காட்சியை தனுஷ் பார்த்ததாகவும், இந்த படத்தின் கதையில் இம்ப்ரஸ் ஆன தனுஷ், இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற விரும்பியதாகவும் இதுகுறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் ஏற்கனவே 'உத்தமபுத்திரன்' மற்றும் 'குட்டி' என்ற இரண்டு தெலுங்கு ரீமேக் படங்களில் நடித்துள்ளார். ஆனால் இரண்டுமே எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடித்தால் கண்டிப்பாக வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.