தனுஷின் அடுத்த பட டைட்டில் அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் வரும் 16ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளிவந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தை, மகன் என இரண்டு கேரக்டர்களில் வித்தியாசமாக நடித்துள்ள தனுஷின் நடிப்பு இந்த படத்தில் பெரும் பாராட்டைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த படத்திற்கு ’சுருளி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான போதிலும் படக்குழுவினர்கள் இந்த தகவலை உறுதி செய்யாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் தான் வெளியிட இருக்கும் படங்களின் வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ் நடித்த ’சுருளி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்திற்கு சுருளி என்ற டைட்டில் தான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Reliance Entertainment unveils its movie calendar for 2020. #Rajinikanth #KartikAaryan #SaraAliKhan #AkshayKumar #KatrinaKaif #RanveerSingh #ParineetiChopra #Dhanush pic.twitter.com/9o6BSbBd2Z
— taran adarsh (@taran_adarsh) January 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com