தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,December 22 2018]

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு 'அசுரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இன்'று வெளியாகியுள்ள இந்த புதிய படத்தின் போஸ்டரில் தனுஷ் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

 

More News

கமல்ஹாசன் கட்சியில் இணைந்த பிரபல இயக்குனர்

கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியான 'மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்த கட்சியில் திரையுலகில் உள்ள பிரபலங்கள் பலர் இணைவார்கள்

ரஜினியுடன் முதல்முறையாக இணையும் ராகவா லாரன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று வரும் பொங்கல் தினத்தில் வெளியாக தயார் நிலையில் உள்ளது.

'பங்கு' பக்கத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே! 'கனா' படம் குறித்து சூரி

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்த 'கனா' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வருகிறது.

இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் வழக்கு

தனது பாடல்களை பொது நிகழ்ச்சிகளில், மேடைகளில் பாடுபவர்கள் தனக்கு ராயல்டி தரவேண்டும் என்று இளையராஜா கூறி வருவது தெரிந்ததே.

'தளபதி 63' இயக்குனர் அட்லியை சந்தித்த 'பேட்ட' டெக்னீஷியன்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் புரடொக்சன் டிசைனராக பணிபுரிந்த சுரேஷ் செல்வராஜன், நீண்ட இடைவெளிக்கு பின் தனது நெருங்கிய நண்பரும் 'தளபதி 63' பட இயக்குனருமான அட்லியை சந்தித்துள்ளார்.