தனுஷின் அடுத்த ஐந்து படங்கள் குறித்த தகவல்கள்.. ரியல் பான் - இந்திய நட்சத்திரம்..!

  • IndiaGlitz, [Friday,July 28 2023]

நடிகர் தனுஷ் ஏற்கனவே தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில படத்தில் நடித்துள்ளதால் அவர் பான் - இந்திய ஸ்டாராக கருதப்படுகிறார். இந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உள்ள படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதை அடுத்து ரியல் பான் - இந்திய ஸ்டாராக அவரை ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.

தனுஷின் 48வது படமான ’கேப்டன் மில்லர்’ என்ற படம் தமிழ் உள்பட 3 மொழிகளில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் என்று அதிகாலை வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் தனுஷின் 49வது திரைப்படத்தை நெல்சன் இயக்க இருப்பதாகவும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷின் 50வது படத்தை சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதோடு அவரே இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனுஷின் 51வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனுஷின் 52வது படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க இருக்கிறார் என்றும் இந்த படத்துக்கு 'TERE ISHK MEIN’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளதோடு அவை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவதால் அவர் ரியல் பான் இந்தியா ஸ்டார் என்பதை இந்த படங்கள் மூலம் அவர் உறுதி செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மாலத்தீவை அடுத்து ஆன்மீக பயணம்.. ரஜினிகாந்த் எங்கே செல்கிறார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஓய்வு எடுக்க மாலத்தீவு சென்ற நிலையில் அடுத்ததாக ஆன்மீக பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 

மீண்டும் ரிலீஸான 'ஒருமனம்' பாடல்.. ஆனால் மிகப்பெரிய மாற்றம்.. 'துருவ நட்சத்திரம்' அப்டேட்..!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் திடீரென கிடப்பில் போடப்பட்டது.

பூமியின் சொர்க்கம்.. இதைவிட அருமையான சூரிய உதயத்தை பார்க்க முடியுமா? சமந்தாவின் வைரல் வீடியோ..!

 நடிகை சமந்தா சில மாதங்கள் நடிப்பில் இருந்து  விலகி முழு ஓய்வு எடுக்க முடிவு செய்ததாகவும் இதையடுத்து அவர் கோவையில் உள்ள ஈஷா தியான மையம், வேலூர் தங்க கோவில் உள்பட சில ஆன்மீக

தனுஷின் ஆக்ரோஷம், துப்பாக்கி குண்டுகளின் முழக்கம்.. 'கேப்டன் மில்லர்' டீசர் எப்படி இருக்கிறது?

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'வாத்தி' இயக்குனரின் அடுத்த பட அறிவிப்பு.. ஹீரோ இந்த பிரபலமா?

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியிருந்த நிலையில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.