'நானே வருவேன்' தனுஷின் இரண்டு செம லுக்: கலைப்புலி எஸ்.தாணு வெளியீடு!
- IndiaGlitz, [Tuesday,August 23 2022]
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்’ படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வருவது தெரிந்ததே. அந்த இரண்டு வேடங்களின் கெட்டப்புகள் கொண்ட போஸ்டர்களை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் தனுஷின் திரையுலக வாழ்வில் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் குறிப்பாக இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து உள்ளதை அடுத்து இரண்டு வேடங்களும் இதுவரை ஏற்காத வித்தியாசமான வேடங்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனுஷின் இரண்டு கெட்டப்புகளுடன் கூடிய இரண்டு இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளார். இதில் இளவயது தனுஷ் மற்றும் நடுத்தர வயது தனுஷ் ஆகிய இரண்டு வித்தியாசமான தோற்றங்கள் காணப்படுகிறது. மேலும் இந்த பதிவில் தயாரிப்பாளர் தாணு விரைவில் திரை அரங்குகளில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் ’நானே வருவேன்’ படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இருப்பதாகவும் பாடல்கள் ஒவ்வொன்றாக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
Coming Soon in Theatres! #NaaneVaruven @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @RVijaimurugan pic.twitter.com/4bs8bw42kk
— Kalaippuli S Thanu (@theVcreations) August 22, 2022