'நானே வருவேன்' தெலுங்கு டைட்டில்: ரிலீஸ் செய்வது யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தின் டீசர் நாளை அதாவது செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ’நானே வருவேன்’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பெற்று உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தெலுங்கில் ’நானே வாஸ்துனானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ’மாப்பிள்ளை’ உள்பட ஒருசில தமிழ் படங்களையும் பல தெலுங்கு படங்களிலும் தயாரித்த அல்லு அர்விந்த் அவர்களின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ’நானே வருவேன்’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்றிருப்பதை அடுத்து இந்த படத்தின் வெற்றி உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Telugu right of #NaaneVaruvean for the entire Andhra Pradesh has been acquired by @GeethaArts 'presents' Neynay Vasthunnaa @dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @theedittable @Rvijaimurugan @saregamasouth #NeynayVasthunnaa pic.twitter.com/YThkIHxDuN
— IndiaGlitz - Tamil (@igtamil) September 14, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments