'நானே வருவேன்' தெலுங்கு டைட்டில்: ரிலீஸ் செய்வது யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் டீசர் நாளை அதாவது செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ’நானே வருவேன்’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பெற்று உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் தெலுங்கில் ’நானே வாஸ்துனானா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த ’மாப்பிள்ளை’ உள்பட ஒருசில தமிழ் படங்களையும் பல தெலுங்கு படங்களிலும் தயாரித்த அல்லு அர்விந்த் அவர்களின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ’நானே வருவேன்’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்றிருப்பதை அடுத்து இந்த படத்தின் வெற்றி உறுதி என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வடிவேலு பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!

நேற்று வைகைப்புயல் வடிவேலு தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவரது பிறந்த நாள் 'மாமன்னன்' படக்குழுவினர் மத்தியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பதும் தெரிந்ததே.

நிறைய மனவலி மற்றும் தலைவலி: விஜய் டிவி பிரியங்காவின் வைரல் பதிவு!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தனக்கு நிறைய மனவலி மற்றும் தலைவலி என்று இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நகுல் மனைவிக்கு இவ்வளவு திறமையா? வைரல் வீடியோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!

நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி பாஸ்கர் மிக அழகாக பாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் நகுலின் மனைவி இவ்வளவு அழகாக பாடுவாரா?

இதை செய்தால் ரூ.10 லட்சம் பரிசு: இயக்குனர் அமீரின் சமூக அக்கறையுள்ள அறிவிப்பு!

போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இயக்குனர் அமீர் போட்டி ஒன்றை நடத்துகின்றார். அவர் நடத்தும் தேசிய அளவிலான உடற் கட்டமைப்பு

மாமியாருக்கு அன்பு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்: என்ன விசேஷம் தெரியுமா?

என்னுடைய இன்னொரு அம்மா என்று கூறி மாமியாருக்கு அன்பு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவனின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.