ஒரே ஒரு ஊருக்குள்ள ரெண்டு ராஜா.. தனுஷ் உடன் பாடியது இந்த பிரபலமா?
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ’நானே வருவேன்’. தனுஷ் வித்தியாசமான இரட்டை வேடங்களில் அண்ணன் தம்பி கேரக்டரில் நடித்துள்ள இந்த படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
’ஒரே ஒரு ஊரில் ரெண்டு ராஜா’ என்ற இந்த பாடலை தனுஷுடன் இணைந்து இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா பாடியுள்ளார் என்பதும், இந்த பாடலையும் தனுஷே எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவாகிய இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அசத்தலாக இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments