2022ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு: 'நானே வருவேன்' படத்தின் முதல் விமர்சனம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’நானே வருவேன்’ திரைப்படம் குறித்த முதல் விமர்சனத்தை வெளியிட்ட ஒருவர் 2022ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்பட்டது. மேலும் நேற்று இந்த படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வரும் 29ஆம் தேதி தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸருக்கு பின்னர் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும், திரைப்பட விமர்சகருமான உமைர் சந்து என்பவர் இந்த படத்தை பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். ‘நானே வருவேன்’ படத்தின் சென்சார் பதிவு பார்த்தேன். தனுஷின் நடிப்பை பார்த்து நான் ஆச்சரியம் அடைந்தேன். 2022ஆம் ஆண்டு அவருடைய ஆண்டுதான்’ என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த ஆண்டு ’திருச்சிற்றம்பலம்’ வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’நானே வருவேன்’ திரைப்படமும் அதேபோன்ற வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Done with #NaaneVaruvean Censor Screening & Speechless about #Dhanush Performance ! 2022 belongs to him ??
— Umair Sandhu (@UmairSandu) September 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout