MYD 1509 என்பதில் குறியீடு இருக்குமா? தனுஷ் கொடுத்த 'கேப்டன் மில்லர்' மாஸ் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இரவு பகலாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் ரிலீஸ் உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பைக்கில் ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தையும் தனுஷ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த பைக் நம்பர் MYD 1509 என்று இருக்கும் நிலையில் இதில் ஏதேனும் குறியீடு இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் என்று தனுஷ் கூறியதை அடுத்து வரும் கிறிஸ்துமஸ் நாளில் அல்லது புத்தாண்டு தினத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Captain Miller .. Trailer soon. Pongal release. pic.twitter.com/45l4xLP5uj
— Dhanush (@dhanushkraja) December 13, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments