'வடசென்னை'யை அடுத்து முடிவுக்கு வந்தது தனுஷின் அடுத்த படம்

  • IndiaGlitz, [Tuesday,June 26 2018]

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வந்த 'வடசென்னை' திரைப்படத்தின் முதல் பாக படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் அவர் நடித்து வந்த ஹாலிவுட் படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் நடித்து வந்த மற்றொரு படமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவடைந்துள்ளது.

இதுகுறித்து இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் கிருஷ்ணா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். தனுஷூடன் நான் நடித்து வந்த 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. சக நடிகர்களை சமமாக எப்படி நடத்த வேண்டும் என்பது உள்பட பல விஷயங்களை நான் தனுஷிடம் இருந்து கற்று கொண்டேன். அதேபோல் இயக்குனர் பாலாஜிமோகனும் கூலாக அனைவரிடமும் வேலை வாங்கினார் என்று கூறியுள்ளார்.

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டோவினோ தாமஸ், ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வெளில போகட்டும்: மமதியை கார்னர் செய்த மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு புரமோ வீடியோவும் அந்த நிகழ்ச்சியை பார்க்க தூண்டும் வகையில் எடிட் செய்யப்படுவதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது

பாடகி ஜானகி குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமாகிவிட்டதாக கடந்த சில மணி நேரங்களாக ஒருசில இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் வதந்தி பரவி வருகிறது.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்: கார்த்தியை பெருமையாக கூறிய சூர்யா

கோலிவுட் திரையுலகில் அண்ணன் தம்பியான சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே முன்னணி நடிகர்களாக உள்ளனர். இதற்கு முன் எத்தனையோ சகோதரர்கள் நடிகர்களாக இருந்தாலும்

மெஸ்ஸி, ரொனால்டோ இடையேதான் போட்டி: கமலுக்கு பதிலளித்த ஜெயகுமார்

நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்பும், ஆரம்பித்த பின்பும் அதிமுக அமைச்சர்கள் அவரை அவ்வப்போது விமர்சனம் செய்து வருவது தெரிந்ததே.