தனுஷின் 'மாரி 2' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Monday,November 26 2018]

தனுஷ் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் 'மாரி 2' படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிந்ததை அடுத்து இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தனுஷ், சாய்பல்லவி, வரலட்சுமி, டோவினோ தமஸ், ரோபோசங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகும்.

More News

குடிபோதையில் கார் ஓட்டினேனா? பத்திரிகையாளர்களை விளாசும் காயத்ரி ரகுராம்

நடிகையும் டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம், குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் அபராதம் கட்டியதாக முன்னணி ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

ரொமான்ஸ் காமெடி படத்தில் ஜோடியாகும் பிக்பாஸ் பிரபலங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் திரையுலகில் வாய்ப்பு பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை: ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று லதா ரஜினிகாந்த் அவர்களின் அறக்கட்டளை சார்பில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். குழந்தைகள் நலன் குறித்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஒரே படத்தில் இணையும் 96 - ராட்சசன் இயக்குனர்கள்

விஜய்சேதுபதியின் '96' மற்றும் விஷ்ணு விஷாலின் 'ராட்சசன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றதுடன் 50வது நாள் என்ற மைல்கல்லையும் அடைந்தது.

ராகவா லாரன்ஸ் கட்டிக்கொடுக்கும் முதல் வீடு இவருக்குத்தான்..

கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சேதங்களை ஏற்படுத்திய நிலையில் அரசு, தன்னார்வ ஆர்வலர்கள், கோலிவுட் திரையுலகினர் என பலரும் அம்மாவட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.