நிறைவடையும் நிலையில் தனுஷின் 'மாறன்': வைரல் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாறன்’. தனுஷ் 43வது திரைப்படமான இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷ், மாளவிகா ஆகிய இருவருமே பத்திரிகையாளர்கள் ஆக நடித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனுஷிடம் காட்சியை விளக்கும் கார்த்திக் நரேன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான ’அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட் திரைப்படமான ’தி க்ரே மேன்’ ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ’திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.