close
Choose your channels

தனுஷின் 'மாறன்', 'திருச்சிற்றம்பலம்' படங்களின் புதிய அப்டேட்டுக்கள்!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘மாறன்’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களின் புதிய அப்டேட்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறன்’ திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ள நிலையில் ஹாட்ஸ்டார் ஓடிடியின் ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோல் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னொரு திரைப்படமான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் அறிவித்துள்ளார்.

தனுஷ், நித்யாமேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார் என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது தமிழ் தெலுங்கில் உருவாகி வரும் ’வாத்தி’ என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. எனவே இந்த ஆண்டு மட்டும் தனுஷின் நான்கு படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment