close
Choose your channels

எதிர்பார்த்தது 'ராயன் 'டீசர்.. ஆனால் வருவதோ வேற லெவல் படத்தின் டீசர்.. தனுஷ் ரசிகர்கள் குஷி..!

Monday, April 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 50வது திரைப்படமான ’ராயன்’ படத்தை அவரே இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகளும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் அதில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ’ராயன்’ படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் திடீரென இன்ப அதிர்ச்சியாக அவர் தற்போது நடித்து வரும் ’குபேரா’ படத்தின் டீசர் மே 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை நிலையில் மே 2ஆம் தேதி வெளியாகும் டீசர் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நாகார்ஜுனா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment