ரஜினியின் 'கூலி' படத்தில் தனுஷின் 'குபேரா' நடிகர்.. வேற லெவலில் யோசிக்கும் லோகேஷ்..!

  • IndiaGlitz, [Wednesday,July 24 2024]

தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ திரைப்படத்தில் நடிக்கும் பிரபல நடிகர், ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சில நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ’குபேரா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது ‘கூலி’ படத்தில் இருப்பதாக கூறப்படுவதால், அடுத்துடுத்து இன்னும் சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பை சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் நாகார்ஜுனா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘கூலி’ படத்தில் தொடர்ந்து பிரபலங்கள் இணைந்து வருவதை அடுத்து இன்னும் யாரெல்லாம் இணைகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.