தனுஷின் 'கர்ணன்' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற மாரியம்மாள் பாடிய ’கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடலும் இசையமைப்பாளர் தேவா பாடிய ’பண்டாரத்தி புராணம்’ என்ற பாடலும் இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த’திரௌபதி முத்தம்’ என்ற பாடலும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விரைவில் ‘கர்ணன்’ படத்தின் டீஸர் வெளியாகும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது டீசர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கர்ணன் படத்தின் டீசர் மார்ச் 23ஆம் தேதி வெளியாகும் என இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பில் அட்டகாசமாக போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த அறிவிப்பை அடுத்து தனுஷ் ரசிகர்கள் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.