தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் எப்போது? கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,January 31 2021]

தனுஷ் நடிப்பில் ’பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ’கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

தனுஷின் ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, புதிய அட்டகாசமான போஸ்டர்களும் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பும் போஸ்டர்களும் தனுஷ் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது