'கர்ணன்' படப்பிடிப்பு குறித்து தனுஷின் முக்கிய டுவீட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் என்ற ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது
இந்த நிலையில் ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் தனுஷ் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வந்தது
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் அதுமட்டுமின்றி இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்றும் தனுஷ் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது
தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
That’s a wrap for karnan second schedule. 90 percent of the shoot completed. pic.twitter.com/BDIXQVgq8e
— Dhanush (@dhanushkraja) February 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments