தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Monday,July 27 2020]

தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோக்களில் ஒருவர் தனுஷ் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவர் நடித்த ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் செல்வராகவனுடன் ஒரு படம், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், வெற்றிமாறனுடன் ஒரு படம், ‘ராட்சசன்’ ராம்குமாருடன் ஒரு படம், கார்த்திக் நரேனுடன் ஒரு படம் என தனுஷ் ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் வரை நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கர்ணன்' படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. ’கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் இந்த படத்தின் மேக்கிங் காட்சிகள் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்