தனுஷின் 'கர்ணன்' படம் குறித்த முக்கிய அப்டேட்: ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Monday,July 27 2020]

தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோக்களில் ஒருவர் தனுஷ் என்பது தெரிந்ததே. ஏற்கனவே அவர் நடித்த ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் செல்வராகவனுடன் ஒரு படம், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படம், வெற்றிமாறனுடன் ஒரு படம், ‘ராட்சசன்’ ராம்குமாருடன் ஒரு படம், கார்த்திக் நரேனுடன் ஒரு படம் என தனுஷ் ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் வரை நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் அடுத்தடுத்து தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கர்ணன்' படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. ’கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் மற்றும் இந்த படத்தின் மேக்கிங் காட்சிகள் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

More News

மகள்களுடன் நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்த பிரபல நடிகர்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை உழுது விவசாயம் செய்ய முடிவு செய்த போது அவரிடம் காளை மாடுகளை வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லை.

டிடிவி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்: காங்கிரஸ் பிரமுகர் மகனை மணக்கிறார்!

தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் டிடிவி தினகரன். இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளையே எதிர்த்து சுயேச்சையாக

கந்தசஷ்டி கவசம் விவகாரம்: வைரலாகும் கேப்டன் விஜயகாந்தின் வீடியோ

சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்தசஷ்டிகவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை பதிவு செய்தது என்பதும் இந்த வீடியோவுக்கு இந்து மத ஆதரவாளர்கள், முருக பக்தர்கள் உள்பட பலர் கண்டனம்

இந்த மாத்திரையால் தான் குணமானேன்: விஷாலின் பரபரப்பு வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகிய இருவரும் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதன் பின் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து குணமாகினர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20வது எம்.எல்.ஏ: இம்முறை யார் தெரியுமா?

தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்