விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தை பிடித்தாரா தனுஷ்? 'கர்ணன்' வசூல் சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் மாஸ் நடிகர்களான தளபதி விஜய் மற்றும் தல அஜீத் உள்ளார்கள் என்பதும் இவர்களது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்களது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள் என்பதும் அதேபோல் வசூலிலும் இந்த இரு மாஸ் நடிகர்களின் படங்களில் சாதனை செய்யும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அஜீத், விஜய்யை அடுத்து தற்போது தனுஷின் திரைப்படமும் தமிழகத்தில் சாதனை வசூல் செய்துள்ளது. தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தனுஷ் திரைப்படம் முதல் நாளில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அஜீத், விஜய்க்கு அடுத்த இடத்திற்கு தனுஷ் வந்துவிட்டார் என்பதையே காட்டுவதாக விநியோகஸ்தர் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதுமட்டுமின்றி தமிழகத்தையும் தாண்டி மற்ற மாநிலங்களிலும் உலகம் முழுவதிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், எனவே இந்த படம் தனுஷின் 19 வருட திரையுலக வாழ்வில் சாதனை வசூல் செய்யும் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதனால் தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் கலைபுலி எஸ் தாணு ஆகியோர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Record Breaking numbers for #Karnan Marching towards #BlockBuster @dhanushkraja’s 19yrs Career’s best ever @mari_selvaraj sir you have nailed it Very proud that @theVcreations have given a wonderful movie to the audience @Music_Santhosh @LaL_Director @RIAZtheboss @ZeeTamil pic.twitter.com/YKXzjMl54h
— RockFort Entertainment (@Rockfortent) April 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments