'தி நியூயார்க் டைம்ஸ்' தேர்வு செய்த சிறந்த 5 படங்களில் ஒன்று தனுஷ் படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஓடிடியில் பார்ப்பதற்கான சிறந்த 5 திரைப்படங்களை ’தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தேர்வு செய்துள்ள நிலையில் அதில் ஒன்று தனுஷ் நடித்த தமிழ் படம் என்பது தமிழ் திரைப்பட உலகிற்கு பெருமை வாய்ந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’கர்ணன்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ’தி நியூயார்க் டைம்ஸ் ஓடிடியில் பார்க்க சிறந்த படங்கள் என ஐந்து படங்களை தேர்வு செய்துள்ளது. அந்த ஐந்து படங்கள் பின்வருமாறு:
1. The Father Who Moves Mountains (ருமானியா - நெட்பிளிக்ஸ்)
2. Koshien: Japan’s Field of Dreams (ஜப்பான் - அமேசான் பிரைம் வீடியோ)
3. I Never Climbed the Provincia (சிலி - அமேசான் பிரைம் வீடியோ)
4. Karnan (இந்தியா - அமேசான் பிரைம் வீடியோ)
5. The Cloud in Her Room (ஹாங்காங் - முபி)
இந்த ஐந்து படங்களில் ஒன்று தனுஷின் கர்ணன் என்பதை அடுத்து தமிழ் திரையுலகினர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments