தனுஷின் 'கர்ணன்' சென்சார் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Tuesday,March 30 2021]

தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2 முறை தேசிய விருது பெற்ற நடிகர் தனுசுக்கு இந்த படத்தின் மூலம் மூன்றாவது தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினர்களிடம் இருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகிய இந்தப் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மில்லியன்கணக்கில் ஃபாலோயர்களை வைத்துள்ள அஜித்-விஜய் பட நடிகரின் 4 மகள்கள்!

அஜித் நடித்த 'பில்லா 2' விஜய் நடித்த 'காவலன்' உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் கிருஷ்ணகுமார்.

மோடியுடன், முன்னாள் முதல்வரை இணைத்து பேசிய தயாநிதி...! தொடர்ந்து திமுக-விற்கு கெட்ட பெயர்..!

ஸ்டாலினை முதல்வராக்க விடாமல் தடுக்க, தயாநிதி மாறன் இப்படி செய்கிறார் என்ற செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது. 

மார்க்கெட்டிங் தந்திரம்: கமல் கட்சி குறித்து கவுதமியின் விமர்சனம்!

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை கவுதமி, ராஜபாளையம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

'கோப்ரா' பட நடிகருக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

நடுக்கடலில் யோகா? மெய்சிலிர்க்க வைக்கும் இளம் நடிகையின்  டிரெக்கிங் அனுபவம்!

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இளம் நடிகை ரகுல் ப்ரீத்தி சிங். இவர் தற்போது ஒரு சில இந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.