தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒய்நாட் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜகமே தந்திரம்’. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சுரேஷ்கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#JagameThandhiram from ????ℕ?? ???? only on @netflixindia !@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/g4SKM9cIPk
— Y Not Studios (@StudiosYNot) April 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com