தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒய்நாட் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’ஜகமே தந்திரம்’. இந்த படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சுரேஷ்கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனவின் உச்சம்…. ஒரு ஆம்புலன்ஸில் சாக்கு மூட்டைகளைப் போல  22 இறந்த உடல்கள்!

நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருக்கிறது

ஆஸ்பத்திரியில் அடித்து விளையாடி கொண்ட டாக்டர்-நர்ஸ்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவரின் கன்னத்தில் பளாரென அறைந்த நர்ஸ் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் இணையும் பிக்பாஸ் வின்னர் ஆரி!

பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி ஏற்கனவே ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தியைப் பார்த்தோம்.

ஐதராபாத் விமான நிலையத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா: வைரல் புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும்

ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த தாயின் உடலை பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற அவலம்!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் இறந்துபோன ஒரு பெண்மணியின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவரது உறவினர்கள் பல மணிநேரம் போராடியுள்ளனர்.