தனுஷின் 'ஜகமே தந்திரம்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,May 29 2021]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூன் 18-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஒய்நாட் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று தனுஷ் மற்றும் ரசிகர்கள் விரும்பினாலும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. இதனை அடுத்து ஜூன் 1-ஆம் தேதி ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் என ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிய இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் ஜேம்ஸ் காஸ்மோ என்ற ஹாலிவுட் நடிகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ்கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தமிழகப் பாஜகவில் வெடித்த புது சர்ச்சை… கிடைக்குமா பதில்!

சினிமா நடிகரும் பாஜக முக்கியப் பிரமுகரும் ஆன எஸ்.வி.சேகர் பேசிய ஆடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் வைரல் வைரலாகி வருகிறது.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? விஜய் பட பாடலுக்கு சாண்டி மகள் லாலாவின் நடன வீடியோ!

பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர், சில்வியா என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் குழந்தை

நீ ஒரு மினி சகலகலா வல்லவன்: வெங்கட் சுபா மறைவு குறித்து டி.சிவாவின் உருக்கமான பதிவு!

நடிகர், தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் வெங்கட் சுபா அவர்கள் இன்று அதிகாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

என் தந்தையை நான் நம்புகிறேன்: மதன் கார்க்கி

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு கேரளாவின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

2021 ஐபிஎல்- எஞ்சிய போட்டிகள் நடக்குமா? பிசிசிஐ சொல்வது என்ன?

ஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாகலாமாகத் துவங்கியது.