தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று.
வந்த நிலையில் திடீர் திருப்பமாக கொரோனா வைரஸ் காரணமாக ’ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லண்டனில் நடந்து வந்த இந்த படத்தின் சவுண்ட் மிக்சிங் பணிகளும் நிறுத்தபட்டன.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையெனில் இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் விரைவில் ‘ஜகமே தந்திரம்’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் ’ஜகம்’ குணமானதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அனேகமாக கொரோனா பாதிப்பு முடிவடைந்ததும் ரிலீஸாகும் முதல் படமாக ‘ஜகமே தந்திரம்’ படம் இருக்கலாம் என கருதப்படுகிறது.
தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Coming Soon to Cinemas.
— Y Not Studios (@StudiosYNot) May 1, 2020
After our 'Jagam' heals.#JagameThandiram#JagameTantram@dhanushkraja @karthiksubbaraj @sash041075@Music_Santhosh @chakdyn @RelianceEnt @Shibasishsarkar @APIfilms@tridentartsoffl @GA2Official @UV_Creations @IamAntoJoseph@onlynikil @IamEluruSreenu pic.twitter.com/MsDkr77Mie
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments